விஜய், அஜித்திற்காக திரிஷாவுக்கு பல கோடியை இறைக்கும் தயாரிப்பாளர்.. எல்லாம் குந்தவையின் அழகு தான் காரணம்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆர்ம்பித்து அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போடு நடித்தார். இடையில் காதல் தோல்வி, கல்யாணம் என்று தோல்வியை சந்தித்ததால் மார்க்கெட்டை இழந்தார்.
பொன்னியின் செல்வன் குந்தவை
தன் இடத்தினை மீண்டும் பிடிக்க 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். ஐஸ்வர்யா ராய்-க்கு இணையான அழகில் ரசிகர்களை அப்படியே கவர்ந்திழுத்துள்ளார். தன்னுடைய சுயரூபத்தை காட்டி ரசிகர்களை ஈர்த்து டிரெண்டான திரிஷாவை நோக்கி தான் தமிழ் தயாரிப்பாளர்கள் படையெடுக்கிறார்கள்.
3 கோடி
அப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிகை திரிஷா தான் கமிட்டாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. அதற்காக 3 நாட்கள் கால்ஷீட்டிற்கு 3 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படமான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தயாரிப்பாளரிடம் பல கோடியில் சம்பளத்தையும் உயர்த்தி பேரம் பேசியிருக்கிறார்கள் திரிஷா.