மில்க் பியூட்டினா அப்படி இருக்கக் கூடாதா?நீங்களும் பெண் தானே!! கோபப்பட்ட தமன்னா..
நடிகை தமன்னா
20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகை தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
பாபி டோல் மாதிரி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வந்த தமன்னா, வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள Odela2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மில்க்கி பியூட்டி எப்படி சிவசக்தி ரோலுக்கு சரியாக இருப்பார் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
மில்க் பியூட்டினா அப்படி இருக்கக் கூடாதா
இதனால் கோபமான நடிகை தமன்னா, நீங்களும் ஒரு பெண் தானே, நீங்கள் என்னை மில்க் பியூட்டி என்று சொல்கிறீர்கள், நீங்கள் ஏன் அந்த மில்க் பியூட்டியால் சிவசக்தியாக நடிக்க முடியாது என்று நினைக்கிறீர்கள், உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது.
இயக்குநர் அசோக் தேஜா மில்க் பியூட்டியை பார்த்து அவமானமாகவோ, வருத்தப்படவோ எண்ணவில்லை, ஒரு பெண்ணின் கிளாமர் என்பது கொண்டாடப்பட வேண்டியது. பெண்கள், முதலில் தங்களையே கொண்டாட வேண்டும்.
அப்போது தான் மற்றவர்கள் கொண்டாடுவார்கள், உங்களையே நீங்கள் வேறுவிதமாக பார்த்தால் மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள். இந்த நபர் பெண்களை அப்படி தப்பாக பார்க்கவில்லை, தெய்வமாக தான் பெண்களை பார்த்தார்.
தெய்வம் கவர்ச்சியாக இருக்கலாம், கொல்லக்கூடியதாக இருக்கலாம், சக்தி வாய்ந்ததாக இருக்கலாம், அதாவது பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும் என்று பெண் பத்திரிக்கையாளரிடம் கோபமாக பதிலளித்துள்ளார் தமன்னா..