ஐஸ்வர்யாவுக்கு யாருடன் திருமணம்! விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கவிருப்பது என்ன?
தொலைக்காட்சி தொடர்களில் ஆரம்பான முதல் இருந்தே மக்கள் மனதினை ஈர்த்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். சகோதரர்களின் அன்பு மற்றும் விட்டுக்கொடுக்கும் குணத்தை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வருகிறது. சமீபத்தில் எபிசோட்டில் கண்ணன் காதலித்து வரும் ஐஸ்வர்யாவை கூடிய சீக்கிரம் பிரசாந்த் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதை தெரிந்துகொண்ட பிரசாந்த் அதெல்லாம் முடியாது என்னுடன் தான் கல்யாணம் என பல வேலைகள் செய்து வருகிறார்கள்.
இதற்கு இடையில் கண்ணன் முன்பு திருடிய பணத்திற்காக தற்போது குடும்பத்தினர் முன் குற்றவாளியாக நிற்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. பிரசாந்தும், மல்லியும் வெளியே செல்லும் நேரத்தை பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறாள் ஐஸ்வர்யா. அப்போது ரோட்டில் நடந்து வரும் ஐஸ்வர்யாவை பார்த்து அவளிடம் பேச வருகிறான் கண்ணன்.
அவனிடம் நான் எங்கயோ போறேன். உனக்கு என்ன? உன்னால தான எதுவுமே பண்ண முடியலைல என சொல்கிறாள். அப்போது கண்ணன், நான் வீட்ல எப்படியாவது சொல்லலாம்ன்னு பார்த்தா, அதுக்குள்ள பிரச்சனை ஆகிருச்சு. என்னை அண்ணன் அடிச்சுட்டாரு. எனக்கு இப்போ என்ன பண்ணனும்னே தெரியலை என்கிறான். அப்போது ஐஸ்வர்யா நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். அவுங்க கண்ல படாம நான் எங்கயாவது போகனும் என சொல்கிறாள்.
சீரியலில் ஐஸ்வர்யாவுக்கு கண்ணனுடன் தான் திருமணம் நடக்கிறது என்கின்றனர், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.