கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்..
இது என்ன மாயம் படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து குறுகிய காலக்கட்டத்தில் 7 ஆண்டுகளில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
முன்னணி நடிகை
முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்து வந்த கீர்த்தி நடித்த பாதிப்படங்கள் தோல்வியையே சந்தித்து வந்தது. இனியாவது நல்ல ஒரு இடத்தை பிடிக்க கிளாமர் ரூட்டுக்கு சென்றிருக்கிறார்.
அதற்கான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். இன்றோடு அவரது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளுக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்கூறி மெசேஜ் செய்தும் அவர்களது சமுகவலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.
30வது பிறந்த நாள்
அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கதிர் ரோலில் நடிக்கும் நடிகர் குமரன் கீர்த்தியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பல ஆண்டுகள் இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பது தற்போது தெரிய வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன இதெல்லாம் கதிர் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.