பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு அவமானப்படுத்தி ஆப்பு வைத்த மீனா அப்பா!! தங்கையை வைத்து பழிவாங்க சபதம் போட்ட மகள்!!

Star Vijay Serials
By Edward Dec 27, 2022 06:45 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்-ஐ எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று மீனாவின் அப்பா கடைக்கு ஆப்பு வைத்து மூடவைத்தார்.

அதன்பின்னும் தீராத பகையால் மீனாவின் தங்கை நிச்சயத்திற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை சாப்பாட்டு விசயத்தில் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். இந்த விசயம் ஈஸ்வரியால் மீனாவுக்கு தெரியவர, கோபத்தில் ஏன் இப்படி அவமானப்படுத்தினீர்கள்.

எனக்காக குடும்பத்துடன் வந்தவர்களை இப்படி தீராத பகையால் இப்படி செய்வீங்களா என்று மீனா அப்பாவை சரமாறியாக திட்டித்தீர்த்தார்.

மேலும், தங்கச்சி கல்யாணம் நடக்கும் முன் நீங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் முன் கெஞ்சிட்டு இருப்பீங்க என்று சவால் விட்டு கோபமுடன் சென்றுள்ளார் மீனா. அப்பாவால் ஏற்பட்ட அவமானத்தால் என்ன செய்வது என்று புலம்பும் மீனா.

இடையில் எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ்-ஐ உடைக்க காத்திருக்கிறார் மீனாவின் அப்பா இப்படி சீரியலை விறுவிறுப்பாக கொண்டு சென்று எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.