உலகளவிலும், தமிழ்நாட்டிலும் பராசக்தி படம் செய்துள்ள வசூல்.. இதோ விவரம்
Sivakarthikeyan
Parasakthi
By Kathick
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இப்படத்தை இயக்க சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா இணைந்து நடித்திருந்தனர்.
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல் மறுபுறம் கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு புதிய படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் விவரத்தை நாம் பார்ப்போம்.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து பார்க்கலாம். இரண்டு நாட்களில் உலகளவில் பராசக்தி படம் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 24+ கோடி வசூல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.