பெற்ற பையன் முன்னாள் இப்படியா..பைத்திக்காரி!! நடிகை பரீனாவை விளாசிய பிரபலம்...
பரீனா அசாத்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் தான் பரீனா அசாத்.

சமீபத்தில் பரீனா அளித்த பேட்டியில், என் மகன் முன்பு நான் ஷார்ட்-ஆன ஆடையணிவேன். அவன் அதை இயல்பான ஒன்றாக பார்த்து வளர்ந்தால், வெளியே அதே மாதிரி உடையணிந்துள்ள பெண்களை பார்த்தாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக்கொள்வான்.

ஒரு பெண்ணின் குணத்தை அவர் ஆடையும் உடையை வைத்தும் மதிப்பிடக்கூடாது என்பதை குழந்தைகள் சிறு வயதில் இருந்தே புரிந்து கொள்ளவேண்டும். ஆண் குழந்தைகளை சரியான மதிப்புகள், புரிதல்களுடன் வளர்த்தால், பெண்களை பற்றிய தவறான எண்ணங்கள் அல்லது முன்முடிவுகள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு அளித்தாலும், ஒருசிலர் விமர்சித்து வருகிறார்கள்.
அந்தவகையில் சமூக ஊடக பிரபலம் பாரிசாலன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாரிசாலன்
அதில், ஆண் பிள்ளை முன் நான் அறையும் குறையுமா டிரஸ் பண்ணிப்பேன்னு ஒரு பைத்திக்காரி சொல்றா, அது ஒரு விதமான துன்புறுத்தல் இல்லையா?

இதுவே ஒரு பெண்ணோட அப்பா என் பொண்ணு முன்னாடி நான் தான் அறையும் குறையுமா டிரஸ் போடுவேன்னு பேசியிருந்தா இந்நேரம் அவன் மேல சட்டம் பாய்ந்து இருக்கும்.
அறையும் குறையுமா அலையனும்னா அலை, ஆனா ஏன் குழந்தைக்காக இப்படி பண்றேன்னு சொல்றது எச்சைத்தனம் என்று நடிகை பரீனாவை கடுமையாக திட்டியுள்ளார் பாரிசாலன்.