திமுக எம் எல் ஏ மகனை கிண்டல் செய்த பரிதாபங்கள்!! கோபி, சுதாகருக்கு கடும் எதிர்ப்பு...

Sudhakar Gossip Today Parithabangal Gopi
By Jai Jul 31, 2026 10:30 AM GMT
Report

சுதாகர், கோபி

திமுக எம் எல் ஏ மார்க்கண்டேயன் முதல்வருக்கு எதிராக மிரட்டல் விடுத்து பேசியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரது மகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்டனங்களை தெரித்தார். மார்க்கண்டேயன் மகன் பேசியதை பலரும் கிண்டல் செய்திருந்தனர்.

குறிப்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலை சேர்ந்த சுதாகர், கோபி இருவரும் இதை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் பரிதாபங்கள் கோபி, சுதாகர் வீடியோவிற்கு திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, வேதனையை வெளி எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

திமுக எம் எல் ஏ மகனை கிண்டல் செய்த பரிதாபங்கள்!! கோபி, சுதாகருக்கு கடும் எதிர்ப்பு... | Parithabangal Gopi And Sudhakar Mocked Dmk Mla

டிஆர்பி ராஜா

அதில், தன் தந்தைக்கு எதிராக நடந்த சட்டவிரோதமான ஒரு செயலுக்குப்பின் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்த முயன்ற ஒரு சிறுவனை இலக்கு வைத்து பரிதாபங்கள் வீடியோ வெளியிட்டிருப்பதை பார்த்து மிகவும் அருவருப்படைகிறேன்.

திறமையான இந்த திறமைசாலிகளுக்கே நான் மிகப்பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு இளம் சிறுவனை தன் வேதனையான காலத்தில் இருக்கும்போது அவனை வைத்து கேலி செய்திருப்பதை பார்த்து வெறும் அருவருப்பே மிஞ்சுகிறது, சோகமான வீழ்ச்சி, இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.