பரிதாபங்கள் கோபி சுதாகரை பிரிக்க ஆள் வந்தாச்சு
டிவியில் நடித்தால் தான் அதிகம் புகழ் கிடைக்கும், சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் அந்த காலம். ஆனால் தற்போது Youtube சேனல் மூலம் இணையத்தில் பாப்புலர் ஆகி இருப்பவர்கள் தான் அதிகம்.
மெட்ராஸ் சென்ட்ரல் என்ற youtube சேனல் மூலம் பிரபலம் ஆன கோபி மற்றும் சுதாகர் அதற்கு பிறகு பரிதாபங்கள் என்ற தனி சேனல் தொடங்கி அதில் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். சினிமாவில் காமெடியன்களாக நடித்த அவர்கள் crowd funding மூலம் ஒரு படத்தையும் எடுக்கின்றனர். நீண்ட காலமாக அந்த படம் முடியாமலேயே இருக்கிறது. இப்போ முடியும், அப்போ முடியும் என்று அவ்வப்போது அப்டேட்டுகளை மட்டுமே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
என்ன நடந்தாலும் அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக தான் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை பிரிக்க ஆள் வந்தாச்சு.
யாரும் தப்பா நினைச்சிடாதீங்க... சுதாகருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. அந்த நிச்சயதார்த்த போட்டோ வைரல் ஆகும் நிலையில் தான் நெட்டிசன்கள் இப்படி கமெண்ட் செய்து வருகின்றனர்.