இரண்டு நடிகைகளால் புலம்பும் பார்த்திபன்! இரவின் நிழல் என்ன ஆபாச படமா.. பயில்வானிடம் மன்னிப்பு

R. Parthiban Iravin Nizhal Bayilvan Ranganathan
By Parthiban.A Jul 23, 2022 12:45 PM GMT
Report

நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் படத்தை எடுத்து முடித்து அதை உலகத்தின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என விளம்பரப்படுத்தினார். அது பற்றி பாராட்டுகள் ஒரு பக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம் ப்ளூ சட்டை மாறன் இவரை மோசமாக விமர்சித்தார்.

இது உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாக் படம் இல்லை என கூறி பிரச்சனை ஏற்படுத்த, அதனால் பார்த்திபன் சந்தித்து வரும் பிரச்சனை எல்லோருக்கும் தெரியும்.

இதனை தொடர்ந்து சேரி மக்கள் அப்படி தான் கெட்ட வார்த்தை பேசுவாங்க என பிரிகிடா கூறிய கருத்து சர்ச்சையாகி அதற்காக பார்த்திபன் மன்னிப்பு கேட்டார்.

இரண்டு நடிகைகளால் புலம்பும் பார்த்திபன்! இரவின் நிழல் என்ன ஆபாச படமா.. பயில்வானிடம் மன்னிப்பு | Parthiban Talked To Bayilvan Ranganathan

மேலும் இரவின் நிழல் படத்தில் ஆடையில்லாமல் நடித்து இருக்கும் ரேகா நாயர் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பொது இடத்தில் வழிமறித்து சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி பயில்வான் பார்த்திபனிடம் பேசி இருக்கிறார். ரேகா நாயர் நடந்து கொண்டது தவறுதான், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொன்னாராம்.

மேலும் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் நிர்வாணமாக நடித்தது பற்றி பேட்டிகளில் பேசி பேசி இந்த படத்தை ஒரு ஆபாச படம், நிர்வாண படம் போல எல்லோரையும் நினைக்க வைத்து மனஉளைச்சலை தருகிறார்கள் எனவும் பார்த்திபன் பயில்வானிடம் கூறினாராம்.