அதை மஞ்சு வாரியரிடம் போய் கேளுங்க..என்னிடம் ஏன் கேட்கிறீங்க.. கோபத்தில் பொங்கிய நடிகை பார்வதி!!
நடிகை பார்வதி
தென்னிந்திய சினிமாவில் நடிப்புக்கு தீனிப்போட்டு முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை பார்வதி. அதை தாண்டி மற்றொரு பக்கம் மலையாள சினிமாவில் பெண்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் விதமாக சினிமா பெண்கள் நல அமைப்பு மூலம் பெண்கள் படும் கஷ்டங்களை பேசி தீர்வு செய்து வருகிறார்.
இந்த பெண்கள் நல அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காரணமே கடந்த 2017ல் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பத்தை தொடர்ந்து தான் பார்வதி இதை தொடங்கினார்.
இதில் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன் தாஸ், மஞ்சு வாரியர், விது வின்செண்ட் உள்ளிட்டவர்கள் இணைந்தனர். ஆனால் மஞ்சு வாரியர், விது வின்செண்ட் போன்ற சிலர் நாளடைவில் அதில் இருந்து விலகினர்.
மஞ்சு வாரியர், விது வின்செண்ட்
இந்நிலையில், பார்வதி அளித்த பேட்டியொன்றில், மஞ்சு வாரியர், விது வின்செண்ட் உள்ளிட்டவர்கள் இந்த அமைப்பில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.
இதனால் கோபடமடைந்த பார்வதி, ஏன் விலகினார்கள் என்று நீங்கள் அவர்களிடம் போய் கேட்க வேண்டும். சம்பந்தமே இல்லாத என்னிடம் இந்த கேள்வியை கேட்பது தவறு.
ஏன் உங்களுக்கு அவர்களிடம் பேட்டி எடுத்து அந்த கேள்வியை கேட்கமுடியாதா?, அதைவிட்டுவிட்டு யார் கடினமாக உழைக்கிறார்களோ அவர்களிடம் வந்து இப்படி நீங்கள் கேட்பது எங்களை ரொம்பவே மரியாதை குறைவாக நடத்துவது போல் இருக்கிறது என்று பொங்கி பேசியுள்ளார்.