இரவில் அவருடன் டேட்டிங்-ஆ? ரகசிய காதலில் இருக்கும் பாவ்னி-அமீர்?

Bigg Boss Pavani Reddy
By Edward Jun 01, 2022 05:45 AM GMT
Edward

Edward

Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் அமீர். நடன இயக்குனராக வேண்டும் என்ற கனவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் பல கஷ்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

பிக்பாஸ் 5 சீசனில் அமீர் பாவ்னியுடன் நெருக்கமாக பழகி காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்கள். அது நிகழ்ச்சிக்கு பின்பும் இருவரும் சந்திப்பது வெளியில் செல்வதுமாக இருந்து வந்தனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஜோடியாக நடனமாடி வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் பிரியங்காவும் ராஜுவும் இருவரின் காதலை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சிகள் பல செய்து வருகிறார்கள். அப்படி கடந்த எபிசோட்டின் போது பாவ்னி அமீரை எனக்கு பிடிக்கும் எனக்கு டைம் வேண்டும் என்று ஓப்பனாக கூறினார்.

இந்நிலையில் பாவ்னி இரவு டின்னர் சம்யத்தில் கேண்டிலைட் முன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பலர் அமீருடன் டின்னராக் காதலை சொல்லிவிட்டீங்களா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.