திருமண வாழ்க்கையை கெடுத்த பெரும்புள்ளி!! பழிவாங்க விடாது துரத்தும் நடிகை..
மூன்று எழுத்து நடிகை
அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் பிரபல நடிகர் மனைவி குழந்தையோடு வாழ்ந்து வந்தார். அதேபோல் மூன்று எழுத்து நடிகைக்கும் திருமணம் செய்து கொண்டு கணவன், குழந்தைகள் என வாழலாம் என்ற எண்ணத்துடன் தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த திருமணம் நின்றது.

அதற்கு அந்த அரசியல் புள்ளி தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. நீ யாரையும் திருமணம் செய்துகொள்ள கூடாது, என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று அந்த நடிகர் பிரச்சனை செய்ததால் 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார்.
அதன்பின் மனைவி, குடும்பத்தை தள்ளிவைத்து விட்டு, அந்த நடிகையுடன் இருக்க மனைவி நீதிமன்றம் வரை சென்றுள்ளார். ஆனால் அரசியலில் முக்கிய இடத்தை பிடித்ததால், மனைவி, குடும்பம் என்று வாழ நடிகர் ஆசைப்பட்டு நடிகையை விலக முயன்றுள்ளார். ஆனால் 40 வயதை கடந்தும் தனக்கென ஒரு வாழ்க்கையோ, குடும்பத்தையோ உருவாக்காமல் இருக்கும் அந்த நடிகை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பழிவாங்க
என் வாழ்க்கையையும் திருமணத்தையும் கெடுத்துவிட்டு, நீ மட்டும் குடும்பத்தோடு வாழ்வதா என்று ஆத்திரமடைந்து பழி தீர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் மூன்றெழுத்து நடிகை. சமீபத்தில் வெளிநாடு சென்ற அதே இடத்திற்கு நடிகையும் ஆஜராகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
உன்னை நிம்மதியா வாழவிடமாட்டேன் என்று கூறும் அளவுக்கு நடிகை எண்ட்ரி கொடுத்ததால், அந்த குடும்ப சமரச பேச்சுவார்த்தை நடக்காமலே போய்விட்டதாம். நடிகை திட்டமிட்டே பழிவாங்கும் நோக்கில் தான் இப்படி செய்கிறார் என்று அரசியல், சினிமா வட்டாரங்களில் காரசாரமாக பேசப்பட்டு வருகிறது.