ஆயிரம் கோடி கன்ஃபார்ம் தான்? இணையத்தை மிரட்டிய பொன்னியின் செல்வன் டீசர்..

Aishwarya Rai Trisha A R Rahman Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Jul 08, 2022 01:20 PM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அதன்படி படக்குழுவினர் சமீபகாலமாக கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் வெளியாகும் தேதியை குறிப்பிட்டு போஸ்டர்களை வெளியிட்டு வந்தனர். இன்றும் ஜூலை 8 ஆம் தேதி படத்தின் டீசரை பிரம்மாண்ட முறையில் சென்னை டிரேட் செண்டர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் நடைபெற்றுள்ளது.

படத்தின் டீசர் 6 மணிக்கு வெளியாகும் நிலையில் 5 மணிக்கே டீசர் வீடியோ இணையத்தில் லீக்காகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதன் அதிகாரப்பூர்வ பொன்னியின் செல்வன் 1ன் டீசர் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பல நூறு கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் எப்படி வசூல் செய்து லாபம் பார்க்கும் என்ற கேள்வி பலரிடன் கேள்வியாக அமைந்தது. ஆனால் தற்போது படத்தின் டீசர் வெளியாகியதில் ஐஸ்வர்யா மற்றும் திரிஷாவின் காட்சி மிகவும் மிரட்டியுள்ளது.

நிச்சயமாக படத்தினை வசூலை மணிரத்னம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் கூறியும் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராயை பார்த்து ஷாக்காகியும் வருகிறார்கள்.


GalleryGallery