அய்யோ சாமி நான் அப்படி சொல்லவே இல்லையே... பதறும் நடிகை பூஜா ஹெக்டே

Pooja Hegde
By Yathrika Jan 19, 2026 02:45 PM GMT
Report

பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் டாப் நாயகனாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் கடைசியாக நடித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ள பூஜா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்ததாக பரபரப்பான விஷயம் ஒன்று வைரலாகிறது.

அதாவது அவர் ஒரு பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் அறைந்தேன்.

அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை" என பூஜா கூறியதாக வைரலாகும் தகவல் உண்மை இல்லையாம்.

பூஜா இப்படியொரு பேட்டியே கொடுக்கவில்லை எனப்படுகிறது.