பட வாய்ப்பை காட்டி பூஜா ஹெக்டேவை காதல் வலையில் சிக்கவைத்த சல்மான் கான்.. 56 வயதில் இப்படியா
Pooja Hegde
Salman Khan
By Kathick
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் புதிதாக உருவாகி வரும் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் காணும் நடிகை பூஜா ஹெக்டேவும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சமீபகாலமாக ஒன்றாக அதிக நேரம் செலவழித்து வருகிறார்களாம். மேலும் சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னும் இரு திரைப்படங்களில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
இவை அனைத்தும் சல்மான் கானின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல் என கூறப்படுகிறது.56 வயதாகும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.