57 வயது காதலருடன் இரவு பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த வீடியோ

Pooja Hegde Salman Khan
By Kathick Dec 27, 2022 09:50 AM GMT
Report

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்து வரும் திரைப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கும் நடிகர் சல்மான் கானுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், இதுகுறித்து இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பொய்யான தகவல் என்றும் இருவர் தரப்பில் இருந்தும் கூறவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு சல்மான் கானின் பிறந்தநாள் கொண்டாடட்டம் இரவு முழுவதும் நடந்துள்ளது. 57 வயதாகியுள்ள சல்மான் கானுக்கு, ஹிந்தி திரையுலகை சேர்ந்த பலரும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம், வீடியோ..