ஆடுகளம் படத்தில் தனுஷ் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்! இது தான் பிரச்சனையாம்

Dhanush Vetrimaaran
By Dhiviyarajan Jan 01, 2023 07:30 AM GMT
Report

வெற்றி மாறன்

வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனராக இருப்பவர் வெற்றி மாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரைத்துரையில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரின் கூட்டணி களமிறங்கியது.

2011 ம் ஆண்டு சேவல் சண்டையை மையமாக வைத்து ஆடுகளம் என்னும் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இதில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். மேலும் இந்த படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என ஐந்து விருதுகளை பெற்றது.

ஆடுகளம் படத்தில் தனுஷ் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்! இது தான் பிரச்சனையாம் | Popular Actor Missed Aadukalam Movie Chance

ஆடுகளம்

ஆடுகளம் படத்தில் பல துணை கதாபாத்திரங்கள் இருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது பேட்டைக்காரன் என்னும் கதாபாத்திரம். இதில் நடிகர் ஜெயபாலன் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்நிலையில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் இவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் இப்படத்தில் நடக்க மறுத்துவிட்டாராம் என்று தகவல் வெளியாகிவுள்ளது. தற்போது இதற்கு பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். 

ஆடுகளம் படத்தில் தனுஷ் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்! இது தான் பிரச்சனையாம் | Popular Actor Missed Aadukalam Movie Chance