ஆம்பள ஷகீலா விஜய்.. பிரபல பத்திரிகையாளரால் பரபரப்பு

Vijay Shakeela
By Kathick Dec 29, 2022 03:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய்யின் திரைப்படங்களுக்கு கூட்டம் கூட்டமாய் தற்போது குடும்ப ரசிகர்கள் வருகிறார்கள்.

ஆனால், ஒரு காலகட்டத்தில் குடும்ப ரசிகர்கள் விஜய் படத்திற்கு வர தயங்கினார்கள். ஏனென்றால் படத்தில் எல்லைமீறி பல காட்சிகளில் விஜய் நடித்திருந்தாராம். ரொமான்ஸ் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், மற்றும் காதலியின் அம்மாவிற்கு சோப் போட்டு விடும் காட்சியில் கூட விஜய் நடித்திருப்பார்.

இதனால் விஜய்யுடைய படங்களுக்கு வரவே குடும்ப ரசிகர்கள் யோசித்தார்கள். இந்நிலையில், இந்த விஷயம் குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஒரு முறை பத்திரிகையில் நடிகர் விஜய் தான் ஆம்பள ஷகீலா என்று எழுதப்பட்டதாக கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.