மறைந்த பாடகி ஆஷா போஸ்லேவின் முழு சொத்து மதிப்பு விவரம்...
ஆஷா போஸ்லே
இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை தான் ஆஷா போஸ்லே.
கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பின்னணி பாடகியாக பல்வேறு பாடல்களை பாடி நிறைய சாதனைகளை செய்துள்ளார்.
92 வயதாகும் இவர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தீவிர சோர்வு மற்றும் மார்பகத் தொற்று காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ஆனால் நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

ஆஷா போஸ்லேவின் இறுதிச்சடங்கு இன்று நடந்து முடிந்தது. இசை வரலாற்றிலேயே மிக அதிகமான பாடல்களைப் பதிவு செய்த கலைஞராக ஆஷா போஸ்லேவின் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இவர் தமிழ் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். வீடு, பங்களா, ரியல் எஸ்டேட், உலக அளவிலான உணவகங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து ஆஷா போஸ்லேவிற்கு ரூ. 250 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.