லவ் டூடே முதல் LIK வரை!! நடிகைகளுடன் லிப்லாக்கில் மிரட்டும் பிரதீப் ரங்கநாதன்..

Gouri G Kishan Pradeep Ranganathan Dragon Dude Love Insurance Kompany
By Edward Apr 12, 2026 02:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

சினிமாவில் அறிமுகமான புதிதில் தனக்கு ஹீரோயினே கிடைக்கவில்லை என்று பிரதீப் ரங்கநாதன் புலம்பினாலும், தற்போது அவருடன் நடிக்க ஏகப்பட்ட நடிகைகள் போட்டிப்போட்டு காத்திருக்கிறார்கள்.

லவ் டூடே முதல் LIK வரை!! நடிகைகளுடன் லிப்லாக்கில் மிரட்டும் பிரதீப் ரங்கநாதன்.. | Pradeep Ranganathan Focussing On Lip Lock Scenes

அப்படி பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்கும் நடிகைகள் லிப்லாக் காட்சியில் கூட நடிக்க தயாராகிவிடுகிறார்கள். இதுவரை அவர் நடித்த அனைத்து படத்திலுமே, பிரதீப் ரங்கநாதன் ஹீரோயின்களுக்கு லிப் லாக் கொடுத்திருக்கிறார்.

அந்தவகையில் பிரதீப் இயக்கத்தில் கோமாளி படத்தில் ஆக்ஸிடண்ட்டல் லிப்லாக் சீனை காஜல் அகர்வாலுக்கும் ரவி மோகனுக்கும் வைத்திருப்பார்.

நடிகைகளுடன் லிப்லாக்

அதேபோல் ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் ஹீரோயின் இவானாவுக்கு உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்யும் போதெல்லாம் கையை வாயில் வைத்து மறைப்பது போன்ற காட்சிகள் இடம்பிடித்தாலும் இறுதியில் லிப்லாக்கையும் வைத்திருப்பார் பிரதீப்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் கல்லூரி காலத்தில் காதலிக்கும் காட்சியில் லிப்லாக் வைத்திருப்பார். கயாடு லோஹருடன் வழித்துணையே பாடலில் அவருடனும் லிப்லாக் வைத்திருப்பார்.

லவ் டூடே முதல் LIK வரை!! நடிகைகளுடன் லிப்லாக்கில் மிரட்டும் பிரதீப் ரங்கநாதன்.. | Pradeep Ranganathan Focussing On Lip Lock Scenes

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் மமிதா பைஜுவுடன் சிங்காரி பாடல் முடிந்து லிப் கிஸ் அடிக்கப்போவார், ஆனால் அவர் தடுத்துவிடுவார். அந்த படத்தில் பிரதீப்புக்கு மமிதா பைஜு ஜோடியே இல்லை என்பதால் லிப் கிஸ் மிஸ் ஆகிவிட்டது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கெளரி கிஷனுடன் லிப் லாக் காட்சி ஏகப்பட்ட முறை காட்டப்பட்டுள்ளதாம். அந்தவகையில் லிப்லாக் வேண்டும் என்று கூறும் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் உலக நாயகன் கமல் ஹாசனை காப்பி அடிப்பதாக அவரை கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Gallery