LIK பட முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்!! 100 கோடி நாயகனுக்கு வந்த சோதனை

Vignesh Shivan Pradeep Ranganathan Box office Love Insurance Kompany
By Edward Apr 11, 2026 10:30 AM GMT
Report

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்து நேற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ள படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

LIK பட முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்!! 100 கோடி நாயகனுக்கு வந்த சோதனை | Pradeep Ranganathan Lik Movie Ww Boxoffice 1St Day

கடந்த சில வருடங்களாக அவருக்கு சரியான படம் அமையவில்லை என்ற சூழல் இருக்க LIK படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

2024-ல் இந்த உலகம் எப்படி இருக்கும், அப்போது காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் என்னவெல்லாம் ஹீரோவின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கதையை நோக்கி நகர்கிறது படம்.

பாக்ஸ் ஆபிஸ்

இப்படியிருக்கையில் கதாநாயகனாக நடித்த பிரதீப், லவ் டுடே, டிராகன், டியூட் என 3, 100 கோடிக்கும் மேல் அள்ளிய பாக்ஸ் ஆபிஸ் படத்தை கொடுத்தார். இதனைதொடர்ந்து LIK படமும் அந்த சாதனை பெறும் என்று எதிர்ப்பார்த்துள்ளனர்.

LIK பட முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்!! 100 கோடி நாயகனுக்கு வந்த சோதனை | Pradeep Ranganathan Lik Movie Ww Boxoffice 1St Day

இந்நிலையில் LIK படம் ரிலீஸான முதல் நாள் முடிவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளது. முதல் நாளே 10 கோடியை அள்ளியதால் ஒரு வாரத்தில் 50 கோடியை அள்ளிவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டியூட் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸைவிட 50 சதவீதம் LIK படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.