பிரகாஷ் ராஜுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட வலி!! எமோஷனலாக பேசிய முதல் மனைவி லலிதா..
தென்னிந்திய சினிமாவில் முரட்டு வில்லனாக முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தற்போது பிஸியான குணச்சித்திர நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். மன்முகத்திறமை கொண்டு தயாரிப்பு, இயக்கம், அரசியல்வாதி, தொகுப்பாளர் என்று கலக்கி வருகிறார். பல படங்களுக்கு விருதிகளை பெற்ற பிரகாஷ் ராஜ், நடிகை லலிதாவை 1994ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
16 வருட திருமண வாழ்க்கையில் இரு பெண் குழந்தைகள் பெற்று வளர்த்து வந்த பிரகாஷ் ராஜ், லலிதாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக 2009ல் விவாகரத்து பெற்ரு பிரிந்துவிட்டார். அதன்பின் 6 ஆண்டுகளுக்கு பின் போனி வர்மா என்பவரை 2010 இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் விவாகரத்து குறித்து பிரகாஷ் முதல் மனைவி லலிதா பேட்டியொன்றில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். விவாகரத்திற்கு பின் மிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அப்போது என் அக்கா, அண்ணன் என்று என் குடும்பத்தினர் என்னோடு இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இரு மகள்கள் கூட இருந்தது மிகப்பெரிய பலமாக எனக்கு இருந்தது. இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட முடியாது, ஏனென்றால் இந்த உலகத்திற்கு தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போக போகிறோம்.
இதற்கிடைப்பட்ட காலத்தில்
வரும் உறவுகள் நிலையானது கிடையாது என்பதை நான் புரிந்து
கொண்டேன் என்று தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமான
விசயத்தை பகிர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி
லலிதா.