ஆடிஷனுக்கு பயந்து, என்னை நானே அவமானப்படுத்திக்க நினைத்தேன்!! நடிகை ப்ரீத்தி முகுந்தன்...

Tamil Actress Actress Preity Mukhundhan Blast Idhayam Murali
By Jai Jul 30, 2026 11:30 AM GMT
Report

ப்ரீத்தி முகுந்தன்

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன். சமீபத்தில் அவர் நடிப்பில் பிளாஸ்ட், இதயம் முரளி போன்ற படங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆடிஷனுக்கு பயந்து, என்னை நானே அவமானப்படுத்திக்க நினைத்தேன்!! நடிகை ப்ரீத்தி முகுந்தன்... | Preity Mukhundhan Emotional About Acting Auditons

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நடிப்பு குறித்து பேசியுள்ளார். அதில், நான் ஒருபுறம் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

ஆடிஷனுக்கு பயந்து

அப்போது எனக்கு வயது 18, ஆனால் எனக்கு நானே, என்மீது நம்பிக்கை இல்லாமல், என்னால் ஆடிஷன் செய்ய முடியாது, என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ளபோகிறேன், எனக்கு நடிக்கத்தெரியாது என்றெல்லாம் பயந்தேன்.

ஆடிஷனுக்கு பயந்து, என்னை நானே அவமானப்படுத்திக்க நினைத்தேன்!! நடிகை ப்ரீத்தி முகுந்தன்... | Preity Mukhundhan Emotional About Acting Auditons

அப்போது என் பெற்றோர் நேரடியாக கல்லூரி விடுதிக்கு காரில் வந்து, என்னை அமர வைத்து பேசினார்கள். நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது? பரவாயில்லை, இதுதான் தொடக்கம், நீ இதை செய்யவேண்டும், முயற்சித்து பார்க்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தி ஆடிஷனுக்கு அனுப்பினார்கள்.

பெற்றோரின் அந்த வார்த்தைகள்தான் எனக்கு முதல் அடியை எடுத்து வைக்க தைரியம் தந்தது. அந்த முதல் ஆடிஷனில் என்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த அனுபவம்தான் சினிமா மீது ஒரு உண்மையான காதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார் ப்ரீத்தி முகுந்தன்.