என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!! பிரேம்ஜியை கலாய்த்த மனைவி இந்து..

Premji Amaren Gossip Today Actors Tamil Actors
By Edward Jun 24, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் பாடகராகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை பிரேம்ஜி அமரன். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த பிரேம்ஜி, விஜய்யின் கோட் படத்திலும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருக்கிறார்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!! பிரேம்ஜியை கலாய்த்த மனைவி இந்து.. | Premji Wife Indhu Post Trending On Social Media

45 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி கடந்த வாரம், இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதாரணமாக நடைபெற்ற பிரேம்ஜி - இந்து திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் போது எப்படி திருமணம் என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இதற்கு பலரும் பிரேம்ஜி - இந்துவுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்ட இந்துவே, தன் கணவரை கலாய்த்த படி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!! பிரேம்ஜியை கலாய்த்த மனைவி இந்து.. | Premji Wife Indhu Post Trending On Social Media

1998ல் பிரேம்ஜி எடுத்த இளமை போட்டோவையும் அதே ஆண்டு எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தையும் வீடியோவாக வெளியிட்டு நாம் இருவரும் ஏன் முன்பே சந்திக்கவில்லை என்று ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார். இதனை பிரேம்ஜியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.