ரஞ்சிதாவை அடுத்து நித்யானந்தாவுக்கு ஆசைபடும் நடிகை? அதுக்கு கைலாசம் தான் போகணும்..

Priya Anand Marriage Nithyananda
By Edward Jul 07, 2022 10:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான படம் வாமணன். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் பிரியா ஆனந்த். இப்படத்திற்கு பிறகு 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்புத்திரை, கூட்டத்தில் ஒருவன், ஆதித்யா வர்மா உள்ளிட பல படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் பிரியா ஆனந்த் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெறாமல் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். தற்போது அந்தகன், சுமோ, காசிதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பிரியா ஆனந்த் நித்யானந்தா குறித்து பதிவிட்டு பேசியுள்ளார். நித்யானந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரை கல்யாணம் செய்தால் என் பெயரைக்கூட மாற்றத்தேவையில்லை.

இத்தனை பேர் அவரை பின் தொடர்கிறார்கள் என்றால் நிச்சயமாக அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதுதானே அர்த்தம் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் அதற்கு நீங்கள் கைலாசா தீவுக்கு தான் செல்ல வேண்டும் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery