கார், பங்களா எல்லாமே ஓகே ஆகிட்டிச்சி! திருமணத்திற்கு ரெடியான பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து பிரபலமாகி வெள்ளித்திரையில் பிரபலமாகி முன்னணி இடத்தினை பிடித்தவர்கள் மத்தியில் இருப்பவர் தான் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என்று ஆனபின், மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாகி முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிக்கவுள்ளார்.
அந்தவகையில் கையில் பல படங்களை வைத்துக்கொண்டு நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் திருச்சிற்றம்பலம், யானை போன்ற படத்தில் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் ஏற்கனவே தான் பல வருடங்களாக காதலித்து வரும் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். சினிமாவிற்கு வரவில்லை என்றால் திருமணம் செய்திருப்பேன் என்று கூட சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் எப்போது திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பவானி, நேரம் வரும் போது பண்ணுவேன். சுதந்திரமான பெண் என்பதால் திருமணம் செய்யக்கூடாது என்ற அர்த்தம் கிடையாது. சுதந்திரமான பெண் என்பதற்காக அப்பா அம்மா இல்லாமலா இருக்கிறோம்.
அப்படி கல்யாணம் செய்தாலும் கணவருடனும் சுதந்திரமாக இருப்போம் என்று கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர். ஒரு படத்திற்காக 20 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெற்று வரும் பிரியா சமீபத்தில் ஈசிஆரில் கார், கோடியில் கார் வாங்கி செட்டிலாகிவிட்டார். இதனால் தான் திருமணம் எப்போது என்று பலர் கேட்டு வருகிறார்களாம்.