எப்போதான் அது ஆரம்பிக்க போகுதோ? கமல் படத்தால் புலம்பும் நடிகை பிரியா பவானி சங்கர்..
செய்தி வாசிப்பாளராகா இருந்து வெள்ளித்திரை நடிகையாக மாறி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
செய்திவாசிப்பாளர் டூ நடிகை
பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்மூலம் சின்னத்திரை சீரியல் வாய்ப்பு பெற்று நடிகையாக மாறினார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கொடுத்த வரவேற்பு தற்போது இந்தியன் 2 வரைக்கும் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது.
அப்படி மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், ஓமனப்பெண்ணே, மான்ஸ்டர் போன்ற படங்கள் வெளியாகியும் யானை, பொம்மை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களிலும் நடித்து வெளியாவதற்கு காத்திருக்கிறது. ஹாஸ்டல் படத்திற்கு பிறகு பல படங்களை வரிசை கட்டும் பிரியா பவானி சங்கர் நடிகர் கமல் ஹாசன் குறித்து கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

கமலுடன் இந்தியன் 2
கமல் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ் மட்டுமில்லாது இந்திய சினிமாவின் பெருமையே கமல் சார் தான். இந்தியன் 2 சமயத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் நமக்கு பதற்றமான சூழ்நிலையே வராது. அவரது கண்களே கூறிவிடும் அவர் கூற வருவது என்னவென்று.
இதெல்லாம் செய்யமுடியுமா என்று யோசிப்பதை கூட சாதாரணமாக செய்து முடித்துவிடுவார். பல விசயங்களை இந்தியன் 2 படத்தின் போது கற்றுக்கொண்டோம். திரும்பவும் அவருடன் இணைந்து எப்போது நடிக்க போகிறோம் என்பது தான் என்னுடைய எதிர்ப்பார்ப்பு.
அதைவிட அவரது படங்கள் பார்க்கும் போது உற்சாகத்தை கொடுக்கிறது என்று மனம் விட்டு பேசியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        