டிடி-க்கு இரண்டாம் திருமணமா!! எல்லாத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்கா பிரியதர்ஷனி..
சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் விஜே பிரியதர்ஷினி. பல தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்த பிரியதர்ஷினி, நடனத்திலும் ஈடுபட்டு வந்தார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
பிரியதர்ஷினியை போலவே தொகுப்பாளினியாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் திவ்யதர்ஷினி என்கிற டிடி. முதல் திருமணம் முடித்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இடையில் நிற்கமுடியாத அளவிற்கு சில உடல் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார் டிடி. சமீபத்தில் டிடி இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. ஆனால் டிடி அதுபற்றி வாய்த்திறக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவரது அக்கா பிரியதர்ஷினி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் டிடி திருமணம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில், என் பையனும் டிடியும் ரொம்ப நெருக்கம் என்றும் பையன் மறைக்கும் விசயம் அனைத்தும் டிடி-க்கு தான் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், டிடி இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்று வதந்திகள் பரவி வந்தது. அது பற்றிய கேள்வி, யாருமா அது தெரிஞ்சா கட்டி வெக்கலாமே என்று சிரித்தபடி கூறியிருக்கிறார். அவள் திருமணம் செய்து கொண்டாள், உனக்கு சந்தோஷம் என்றால் அதை செய் என்று சொல்லுவேன் என்று பிரியதர்ஷினி கூறியிருக்கிறார்.