பிக் பாஸ் வந்தால் சூடு சொரணை இருக்காதா? பிரியங்கா இப்படியா ஒப்பனா சொல்றது
தமிழில் பிக் பாஸ் 5ம் சீசன் மிக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பைனலுக்கு இன்னும் ஒரே வாரம் தான் இருக்கிறது தான் என்பதால் தற்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டு இருக்கிறது.
பண பெட்டி இந்த வாரம் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு அதை எடுத்துக்கொண்டு வெளியில் செல்பவர்கள் கிளம்பலாம் என சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை யாரும் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு மேலும் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. 'தில் இருந்தா ஹலோ சொல்லு' என்ற அந்த டாஸ்கில் நிரூப் கால் எடுத்து பேசி உப்பு, சக்கரை உள்ளிட்டவற்றை தியாகம் செய்துவிடுகிறார். இதனால் மற்றவர்கள் அவரிடம் சண்டை போடுகிறார்கள்.
இந்த வீட்டுக்கு வந்து 95 நாட்கள் எதை விட்டு இருக்கிறோம் என நிரூப் கேட்க, அதற்கு பிரியங்கா "வெக்கம், மானம், சூடு, சொரணை என அனைத்தையும் விட்டு தான் இங்கே இருக்கிறோம்" என ஓப்பனாக கூறி இருக்கிறார்.
உண்மையை இப்படி ஓப்பனாக சொல்லிட்டாரே பிரியங்கா!