32-வது பர்த்டே போட்டோஷூட்!! புன்னகையுடன் நடிகை பிரியங்கா மோகன்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா மோகன், தற்போது தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டி வரும் நிலையில் தனது பர்த்டே ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை இறக்கியுள்ளார்.
பிரியங்கா மோகன்
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் பெற்று பிரியங்காவுக்கு நல்ல கெரியரை தேடி கொடுத்தது.

இதனை அடுத்த சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் படத்தில் இணைந்து நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டாகி ரூ. 100 கோடி வசூலை அள்ளியது.
பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் கேப்டன் மில்லர், ரவி மோகனின் பிரதர் போன்ற ஃபிளாப் படங்களில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் பவண் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வெளியான OG படத்தில் நடித்தார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சணத்தி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இன்று நவம்பர் 20 ஆம் தேதி பிரியங்கா மோகன் தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அதனையொட்டி, பர்த்டே ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.