அந்த நம்பர் மீது நம்பிக்கையில்லை.. சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்திய சிவகர்த்திகேயன் பட நடிகை?
ஜெயிலர் படப்பிடிப்பு
டாக்டர், பீஸ்ட் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தினை இயக்க ஆரம்பித்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
அனிருத் இசையில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக நடிகை பிரியங்கா மோகனின் பெயர் அடிப்பட்டது. டாக்டர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் நடிக்கவில்லை என்று உண்மையை கூறியுள்ளார்.

பிரியங்கா சொன்ன உண்மை
ஜெயிலர் படத்தில் நடிப்பதாக பேச்சு வார்த்தை நடக்கவில்லை என்றும் அது வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீவள்ளியாக இருக்கவே ஆசைப்படுவதாகவும் நம்பர் ஒன் நடிகை அந்தஸ்து மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படி அவர் கூறியது சூப்பர் ஸ்டாரை கேலி செய்யும் வண்ணம் இருப்பதாகவும் நடிக்கவில்லை என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம் ஏன் தேவையில்லாத ஒன்றை கூற வேண்டும் என்றும் அவரை விமர்சித்தும் வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.