கீர்த்தியின் செயல்!! மரியாதை போய்விடும்.. வெளுத்து வாங்கிய பிரபலம்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு அவருடைய முதல் பாலிவுட் படமான பேபி ஜான் படத்தை ப்ரோமோட் செய்ய சென்று விட்டார்.
ப்ரோமோஷனில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் தாலி தெரியும்படி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல சர்ச்சைகளில் சிக்கியது.
வெளுத்து வாங்கிய பிரபலம்
இந்நிலையில், இதுகுறித்து சேகுவேரா பேட்டி அளித்துள்ளார். அதில், " கீர்த்தி சுரேஷ் ஹனிமூன் கூட செல்லாமல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நல்ல செயல் தான்.
ஆனால், இது போன்ற ஒரு உடை அணிந்து கொண்டு தாலிக்கயிறு வெளியில் தெரியும் அளவிற்கு உலா வருவது பாரம்பரியத்தை மதிக்கும் செயல் அல்ல, அதை அசிங்கப்படுத்தும் செயல்.
கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா 110 படங்களுக்கு மேல் நடித்திருப்பார். ஆனால், இது போன்று அவர் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை.
அதற்கு மாறாக கீர்த்தி புது தாலி உடன் வேறு ஒரு நடிகருடன் நெருக்கமாக புகைப்படம் எடுக்கிறார். இது போன்று அவர் செய்து கொண்டிருந்தால் அவருக்கு மரியாதையே இல்லாமல் போய்விடும்" என்று கூறியுள்ளார்.