இனிமேலும் பொறுக்க முடியாது.. விஜய் டிவி ரச்சிதா எடுத்த அதிர்ச்சி முடிவு
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பாப்புலர் ஆன ரச்சிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். அதன் பிறகு அவர் தற்போது அதே விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஹீரோ மாயன் ரோலின் மனைவி மஹா ரோலில் தான் அவர் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் அவருக்கு அதிக் முக்கியத்துவம் கதையில் வழங்கப்பட்டு வந்தது. மிர்ச்சி செந்தில் மற்றும் ரச்சிதாவின் லவ் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் வந்தது. ஆனால் சமீபத்தில் மாயன் தம்பி மாறன் கதாபாத்திராம் சீரியலில் களமிறக்கப்பட்டது. அதனால் முழு கதையும் டபுள் அக்ஷன் ரோலில் நடிக்கும் செந்தில் சுற்றி தான்.
டபுள் ரோலிலும் செந்தில் கலக்க, ரச்சிதாவுக்கு காட்சிகள் மிக மிக குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரச்சிதா கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனால் அவர் NINI 2 சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என சில மாதங்களுக்கு முன்பே தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என ரச்சிதா கூறினார். இப்படி சொல்லி சொல்லி நீங்களே வெளியே அனுப்பிடுவீங்க போல என கோபமாக கேட்டு இருந்தார்.