படவாய்ப்பிற்காக கிடைச்சது விவாகரத்தா? பிரபல சீரியல் நடிகையின் பிளான்..

serialactress Rachitha Mahalakshmi NINI saravananmeenakshi
By Edward Feb 16, 2022 02:32 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி. இந்தசீரியலில் 2 மற்றும் 3 சீசனில் முக்கிய ரோலில் நடித்தவர் ரக்ஷிதா மகாலட்சுமி. அந்த சீரியலுக்கு பிறகு ஜூனிடர் சீனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக கலந்து கொண்டார்.

பின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஆர்ஜே செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார். படவாய்ப்புகள் பல தன்னை தேடி வருவதால் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகி படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் வேறொரு நிகழ்ச்சிக்கு தாவிய மகா புது சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் தினேஷ் என்பவரை 8 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெறவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒரு வருடங்களுக்கு மேலாகவே இருவரும் சந்திக்காமல் இருந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே மொழி பிரச்சனை தான் கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என்று கூறி வருகிறார்கள். தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தில் எப்படி அவர்கள் குடும்பம் சமாதானம் செய்து வருகிறதோ அதேபோல் இவர்களின் விவகாரத்தில் குடும்பத்தினர் பேசி பிரச்சனையை தணிக்க முயற்சிகள் செய்து வருகிறார்களாம்.