மத்திய அரசு SIDCO இணையதளத்தில் ரச்சிதா வெறியன் செய்த வேலை!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Government Of India Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Jai Aug 11, 2026 08:45 AM GMT
Report

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.

SIDCO

இந்நிலையில் ரச்சிதாவின் ரசிகர் ஒருவர் செயல் சோசியல் மீடியாவில் தற்போது காரசாரமாகவும் காமெடியாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு SIDCO இணையதளத்தில் ரச்சிதா வெறியன் செய்த வேலை!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Rachitha Mahalakshmi Photo Used On Sidco Website

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சிட்கோ(SIDCO) இணையதளத்தில் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் பெயருக்கு நேராக சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதுதான் அந்த விஷயம்.

இதனை கவனித்து ஆதாரத்துடன் எக்ஸ் பக்கத்தில் நவீன் மணிகண்டன் என்பவர் வழக்கம் போல் சிட்கோ இணையதளத்தை பார்வையிட்டு கொண்டிருந்தபோது, என் கவனத்தை ஈர்த்த ஒரு விஷயம் என்று கூறி, டாக்டர் அகிதா சிங் - டைரக்டர் ஆஃப் இந்தியா என்ற உயர்மட்ட பதவியின் பெயருக்கு கீழ், நடிகை ரச்சிதா போட்டோ போடப்பட்டுள்ளது, இதை பார்த்து நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதனை கவனித்த நெட்டிசன்கள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க அரசு வெப்சைட் என்று கலாய்த்து வருகிறார்கள்.

Gallery