ரஜினிய வாடா போடானு சொல்லக்கூடாது!! ராதாரவியை மிரட்டிய இயக்குனர்.. சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை...
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கராகவும் டப்பிங் யூனியன் தலைவராகவும் திகழ்ந்து வரும் நடிகர் ராதாரவி, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். ஆரம்பகாலத்தில் ராதாரவி, முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து கலக்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் அதிகளவில் நடித்திருக்கிறார்.
அந்தவகையில் முத்து படத்தில் அம்பத்தார் என்ற ரோலில் நடித்த ஒரு சம்பவத்தை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். மெட்ராஸில் முதல் நாள் ஷூட்டிங் நடந்த போது எனக்குன்னே ஒருத்தன் வந்து மாட்டுனான், அது ஒரு உதவி இயக்குனர். ஒரு சீன் எடுத்து முடித்தப்பின், நேராக என்னிடம் வந்து சார்-ஐ (ரஜினிகாந்த்) நீங்கள் வாடா போடான்னு பேசுறீங்க, நீங்கள் அப்படி பேசக்கூடாதுன்னு சொன்னான்.
அதற்கு நான் வாங்க போங்கன்னு கூப்பிடவா என்றது இல்ல சார் வா, போன்னு சொல்லுங்க என்று சொன்னான். சாப்பிட்டு முடித்ததும் நேராக சூப்பர் ஸ்டாரிடம் சென்று, சார் உங்களை வாடா போடான்னு சொல்றது உங்களுக்கு மனகஷ்டமாக இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்றார். ஒருத்தர் வந்து என்னிடம் சொன்னார் என்றதும், எவனாவது அப்படி சொல்லட்டும் என்று கூறிவிட்டார் என்று ராதா ரவி ஓப்பனாக பேசியிருக்கிறார்.