ரஜினி பட நடிகையை அப்படி செய்ய சொன்ன நபர்கள்.. ஆனால், நடிகை எடுத்த முடிவு என்ன தெரியுமா

Radhika Apte
By Kathick Jun 12, 2022 07:15 PM GMT
Report

கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா அப்டே. இவர் ஹிந்தியில் வெளிவந்த பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ராதிகா அப்டே அளித்துள்ள சமீபத்திய பேட்டி, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதில் " சினிமாவிற்கு நான் வந்த புதிதில், பலரும் என் உடலில் சர்ஜரி செய்யும்படி சொன்னார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர்.

மேலும் சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன் " என்று கூறியுள்ளார்.