கமல் எந்த நடிகையையும் விட்டுவைக்க மாட்டார்!! அந்த ஒரு முத்தக்காட்சியால் 30 ஆண்டுகளாக ஒதுக்கி வரும் நடிகை
தமிழ் சினிமாவில் 80களில் ஆரம்பித்து தற்போது வரை உலக நாயகனாக திகழ்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளவர் கமல் ஹாசன். நடிப்பை தாண்டி ரொமான்ஸ் செய்வதில் ராஜாதிராஜாவாக திகழும் நடிகர் என்று பெயர் பெற்றவர்.
ராதிகா - கமல் ஹாசன்
அப்படி தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சி, முத்தக்காட்சி என வைக்காமல் இருக்கவே மாட்டார். இதனால் சில நடிகைகள் அவருடன் நடிக்கவே பயப்படுவார்கள். அந்தவகையில் நடிகை ராதிகா 1987 காலக்கட்டத்தில் சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை என இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
அதிலிருந்து கமல் ஹாசனுடன் நடிக்க ராதிகாவுக்கு வாய்ப்பும் வரவில்லை அவர் கேட்கவும் இல்லையாம்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ராதிகா, கமல் ஹாசனுடன் நடிக்கவே இல்லை. கமல் ஹாசனுடன் நெருக்கமாக மற்றும் முத்தக்காட்சி குறித்து சமீபத்தில் நடிகை ராதிகா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில் கமல் ஹாசன் எந்த நடிகையையும் விட்டு வைக்கமாட்டார். ரசிகர்கள் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை விரும்புவார்கள் என்று கமலுக்கு நன்றாகவே தெரியும்.
முத்தக்காட்சி
அவருடன் முத்தக்காட்சிக்கும் ரொமான்ஸ் காட்சிக்கும் யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அவரிடம் கழுதையிடம் ரொமான்ஸ் செய்யச்சொன்னால் கூட அவர் அதை செய்வார். ரொமான்ஸ் காட்சியில் கமல் ஹாசன் பதட்டமே இல்லாமல் நடித்து கட் செய்தா ரொமான்ஸ்-ஐ நிறுத்தியும் உடனே அதை வரவழைக்கும் திறமை கொண்ட நடிகர் என்று கூறியுள்ளார்.
கமல் ஹாசனை போல் ரொமான்ஸ் செய்யும் நடிகரை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் ராதிகா கூறியிருந்தார். சமீபத்தில் கமல் ஹாசன் பிறந்தநாளுக்கு கமலுடன் இரவு பார்ட்டியில் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை ராதிகா.