சிறுநீர் கழிக்க போனல் மைக்கில் இயக்குனர் அப்படி கேட்பார்!! வேதனையில் புலம்பிய சீரியல் நடிகை ராதிகா...
சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமானவர் ராதிகா ப்ரீத்தி. ஹீரோயினாக நடித்து வந்த ராதிகா சில காரணங்களால் இந்த சீரியல் முடிவதற்கு முன்பே சீரியலை விட்டுவிலகிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
சீரியல் நடிகர் அசீமுக்கும் எனக்கும் சண்டை இல்லை. நண்பர்களுக்குள் என்ன இருக்குமோ அதுதான் நடக்கும் என்றும் பிரச்சனையே தயாரிப்பு குழுவுடன் தான் என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஒன்றை ஆண்டுகளாக எனக்கு சம்பளம் தராமல் சீரியல் ஒளிப்பரப்பான பிறகு தான் சம்பளம் வரும் என்று எதிர்பார்திருந்தேன். ஆனால் 10 ஆயிரம் 20 ஆயிரம் மட்டுமே தான் கொடுப்பார்கள். அதைவிட ஷூட்டிங்கில் நடந்த அசவுகரியமான சூழல் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். சீக்கிரம் வரச்சொல்லுவர்கள்.
அப்படி 7.30 மணிக்கு சென்றால் நான் தான் கேட்டையே திறப்பேன்.அதைவிட ஷூட்டிஙில் ஆண்கள் பெண்களுக்கு ஒரே கழிவறை. கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழிக்க செல்ல இயக்குனரிடம் பள்ளி குழந்தைகள் போல் பர்மிஷன் கேட்டு போகனும்.

ஒரே பாத்ரூம் தான் யூஸ் பண்ணுவோம்..எனக்கும் அசீம்க்கு உண்டான உறவு இதுதான்..சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஓபன் டாக்
அப்படி கேட்டு போனால், எப்போது வருவீங்க என்று மைக்கிலேயே கேட்பார்கள். இப்படி கஷ்டமான சூழலாலும் சம்பளம் கொடுக்காமல் இருந்ததாலும் தான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா ப்ரீத்தி.