தொகுப்பாளினி டிடி-ஐ பளார்விட்ட ராதிகா!! பேட்டியில் அதிர்ந்து போன பிரபல நடிகை..
திவ்யதர்ஷினி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுப்பாளினியாக பணியாற்றும் முன் டிடி சில சீரியல்களில் நடித்துள்ளார்.
அதில் நடிகை ராதிகா தயாரித்து நடித்த செல்வி சீரியலில் மதுவந்தி என்ற ரோலில் டிடி நடித்திருப்பார். அந்த சீரியல் குறித்து ராதிகா, காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
செல்வி சீரியல்
ராதிகாவும் நடிகை ஸ்ரீப்ரியாவும் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில், ஷூட்டிங்கில் உன்னை(டிடி) ரொம்ப கலாய்ப்பேன் என்று சொன்னதும் அறை எல்லாம் விட்டு இருக்கீங்களே மேம், அதை நான் மறக்கவே மாட்டேன் என்று டிடி கூறியிருக்கிறார்.
அப்படி சொன்னது ஸ்ரீப்ரியா அப்படி என்று ஷாக்காகினார். ஆமால் செம்ம அறை விழுந்திருக்கு, காட்டணுமா என்று சிரித்தபடி கேட்க, வேண்டாம் மேம் என்று டிடி ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். தற்போது சீரியலில் ராதிகா டிடியை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.