கமல் ஹாசனின் விக்ரம் படத்தை தூக்கி எறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ்! இதுதான் காரணம் என்ற விளாசும் மாஸ்டர்..
60 ஆண்டுகளாக சினிமாத்துறையில் பல சாதனைகளை பெற்று தற்போது ஆரசியலிலும் பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். பல படங்களின் படப்பிடிப்பு கொரானாவால் தள்ளியும் கைவிரிக்கப்பட்டும் வந்தது. அந்தவகையில் கமல் ஹாசன் என் குரு நாதர் என்றிருந்த மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கமல் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் கமலும் லோகேஷ் கனகராஜின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இதையடுத்து விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரண்ஸ் ஒப்பந்த செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அப்படத்தில் இருந்து விலகுவதாக கூறினார் ராகவா லாரன்ஸ். அவர், விலகியதை தொடர்ந்து மலையாள நடிகர் ஃபகத் பாசில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கு என்ன காரணம் என்று வதந்திகள் பரவியதை அடுத்து, தானாகவே முன்வந்து ஏன் விக்ரம் படத்தில் இருந்து விலகினார் என்பதை குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது ஹீரோவாக ருத்ரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்திலும் நடிக்க உள்ளார்.
இதன் காரணமாகவே விக்ரம் படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார். இதுக்கு ஏன் தேவையில்லாத வதந்திகள் என்று ஷாக்காகியுள்ளார்.