ஆணவத்தில் ஆடிய இளையராஜான்னு சொன்னீங்க!! ரகுமான் விசயத்தில் கோபப்பட்ட ரசிகர்கள்..
இசைபுயல் ஏ ஆர் ரகுமான் நடத்திய சென்னை கான்செட் சில தினங்களுக்கு முன் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் சில குளறுபடி ஏற்பட்டு பல பிரச்சனைகளை ரசிகர்கள் சந்தித்தாக ஏ ஆர் ரகுமான் மீது புகார் எழுந்தது.
ஆனால் நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் 21 ஆயிரம் பேருக்கு மட்டுமே காவல் துறையினரிடம் அனுமதி வாங்கி கூடுதலாக 20 ஆயிரம் டிக்கெட்டுகள் அச்சடித்து விற்றுள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் இதே சம்பவம் இசைஞானி நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது. ஒரு கச்சேரியின் போது மேடையில் செக்கியூரிட்டி வந்ததால் கோபத்தில் அவரை திட்டிதீர்த்தார்.
அதோடு 500 ரூபா டிக்கெட் வாங்கிட்டு 10 ஆயிரம் ரூபா டிக்கெட் சீட்டில் ஏன் உட்காருகிறீர்கள் என்றும் கேட்டார். இதற்கு பலர் ஆணவத்தில் இசைஞானி ஆடினார் என்று சாடி வந்தனர்.
ஆனால் ரகுமானுக்கு மட்டும் ஒரு நியாயமா என்று நெட்டிசன்கள் திட்டியும் வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Raja takes responsibility on the stage itself..
— Blue Sattai Maran (@tamiltalkies) September 13, 2023
'500 ரூபா டிக்கட் வாங்கிட்டு 10,000 ரூபா டிக்கட் சீட்ல ஏன் உக்கார்றீங்க?' https://t.co/nWYpxovCu4