வேண்டும் என்றால் கொரொனாவை தள்ளி வைத்துக்கொள்ளலாமா, ராஜமௌலியை கலாய்க்கும் ரசிகர்கள்

rajamouli rrr
By Tony Dec 25, 2021 02:57 AM GMT
Report

ராஜமௌலி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர், இவர் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக RRR படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ராஜமௌலி காலில் சக்கரம் கட்டி சுழன்று வருகின்றார்.

தமிழகம், வட இந்தியா, கர்நாடகா, ஆந்திரா என  இவர்கள் ப்ரோமோஷன் செய்யாத இடங்களே இல்லை.

இந்நிலையில் ராஜமௌலி தன் படத்துடன் மற்ற நடிகர்கள் படங்கள் வந்தால் வசூல் பாதிக்கும் என்று நினைத்துள்ளார்.

இதன் காரணமாக பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து அவர்கள் படங்களை தள்ளி வைத்தார்.

இதற்கு ஒரு குறும்புக்கார ரசிகர் ஒருவர், வேண்டும் என்றால் கொரொனாவிடம் போய் கோரிக்கை வைத்து வராமல் இருக்க செய்யுங்கள் ராஜமௌலி என்று கிண்டல் செய்துள்ளார்.