ரஜினிக்கு மிகநெருக்கமாக தொடர்பில் இருந்த இயக்குநர்! அடுத்த லிஸ்ட் இவர்தானாம்..

rajinikanth muthu ksravikumar kbalachandar hbdrajinikanth
By Edward Dec 12, 2021 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். தற்போது தன்னுடைய 71 வயது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பல இந்திய பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார். அப்படி அவருடன் பணியாற்றி பல ஸ்வாரஷ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அதில் குணச்சித்திர கதாபாத்திர நடிகருமான சந்திரா லட்சுமன் அவர் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் எப்படி ஜோடி சேர்ந்தார்கள் என்ற சீக்ரெட்டை கூறியுள்ளார். ரஜினிகாந்த் கேரியரில் கேஎஸ் ரவிக்குமார் வாழ்க்கையிலும் ஏஆர் ரகுமான் வாழ்க்கையிலும் முதல் படமாக அமைந்தது முத்து. அப்படத்தினால் எனக்கு நஷ்டம் தான் என்று கூறிய சந்திரா லட்சுமன், நெப்போலியனை வைத்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தயாரிக்க திட்டமிட்டு அவரை சந்திக்க காத்துக்கொண்டிருந்தாராம்.

அப்பொது முத்துகுளிக்க வாரிங்களா என்ற படத்தின் படப்பிடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இருந்துள்ளார். இதை முடித்து விட்டு நான் உங்களை ஜெமினி ஸ்டுடியோவில் பார்க்கலாம் என்று கூறி என்னை பின்னர் வரவழைத்தார் ரவிக்குமார். அவருடன் பேசியபோது பசும்பொன் படப்பிடிப்பில் இருந்து அதை முடித்த பிறகு நான் மீண்டும் ரவிகுமாரை சந்தித்தேன்.

அப்போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வேறொரு இயக்குனர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தினை இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் இது பத்திரிக்கையில் செய்தியாக வெளியாகியது. நான் என் படத்தை கூறிய பின் அவர் வரமாட்டார் என்று நினைத்து சென்றுவிட்டேன். என்னை ஒதுக்கி எடுத்த படமாக அமைந்தது தான் முத்து படம்.

ஏற்கனவே கேஎஸ் ரவிக்குமாரை தெரிந்து வைத்திருந்த ரஜினிகாந்த் பாஷா படத்தினை கேஎஸ் ரவிக்குமாருடன் பார்த்துள்ளார். அப்படத்தில் ஒருசில குறையை சொல்லியிருக்கையில், இவர் தான் உன் அடுத்த இயக்குநர் என்று கேஎஸ் ரவிக்குமாரை பார்த்து கே பாலசந்திரன் கை நீட்டியுள்ளார். அதற்கு எந்த மறுப்பும் இல்லாமல் ஓகே கூறியுள்ளார் முத்து படத்திற்காக.

இப்படத்தின் போது ஜெயலலிதா பல கஷ்டங்களை கொடுத்தும் அதை மீறி படத்தினை வெளியிட்டு உலக அளவில் பெரிய வெற்றியை கொடுத்தது முத்து படம். இதையடுத்து தன்னுடைய முக்கிய தொடர்பில் இருக்கும் இயக்குநரில் முதல் இடத்தினை பிடித்தார் கே எஸ் ரவிக்குமார். இப்படத்தின் மார்க்கெட் சீனா, ஜப்பான் வரை கொண்டு சேர்த்துள்ளது. லிங்கா படத்தின் பிரமோஷன் அதிகளவில் ஜப்பானில் விற்க கே எஸ் ரவிக்குமாரின் முத்து படம் தான் காரணமாக அமைந்தது என்று அவர் கூறியுள்ளார். இதைதொடர்ந்து லிங்கா படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.