உஷாராக இருக்கும் ரஜினி! பினாமினு சொல்றாங்க.. மேடையில் புலம்பிய சூப்பர்ஸ்டார்
Rajinikanth
By Parthiban.A
நடிகர் ரஜினி என்னதான் முன்னணி ஸ்டாராக இருந்தாலும் அவரையும் நெட்டிசன்கள் விட்டு வைப்பதில்லை. சின்ன விஷயம் கிடைத்தாலும் பெரிதாக ட்ரோல் செய்து வறுத்தெடுத்துவிடுவார்கள்.
அவர் மேடையில் பேசுவது கூட சில நேரங்களில் விமர்சனங்களை சந்திப்பதுண்டு.
இந்நிலையில் ரஜினி இன்று ஒரு ஹாஸ்பிடலில் நடந்த விழாவில் பங்கேற்றார். அதில் பேசிய ரஜினி தான் ஏன் எந்த விதமான திறப்பு விழாவுக்கு வருவது இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நான் எதாவது கடை, நிறுவனம் அல்லது கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு சென்றால் அது என்னுடைய பினாமி சொத்து அல்லது அதில் நானும் பார்ட்னர் ஆக இருக்கிறேன் என கூறிவிடுகிறார்கள். அதனிலேயே நான் திறப்பு விழாக்களுக்கு செல்வதில்லை என கூறி இருக்கிறார்.