நடிகையின் முன் சத்யராஜை அசிங்கப்படுத்திய ரஜினிகாந்த்!! 37 வருஷமாக ஒதுக்க இதுதான் காரணம்
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட உயரத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை தக்கவைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அப்படி அவர் வளர்ந்து வரும் காலத்தில் கமலுக்கு இணையாக உயர்ந்து நின்றவர் நடிகர் சத்யராஜ். ரஜினியுடன் சத்யராஜ் சில படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த காலக்கட்டத்தில் சத்யராஜைவிட ரஜினிகாந்தின் மார்க்கெட் அதிகரித்திருந்த சமயம். அப்போது தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் ரஜினி - சத்யராஜ் நடித்தார்கள். அப்படத்தில் நடிகை மாதவி ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அப்படி ஷூட்டிங் நடந்த போது மாதவியிடம் ரஜினிகாந்த், சத்யராஜ் பற்றி கிண்டலாக பேசியது மிகப்பெரிய சங்கடத்தை கொடுத்தது. புதிதான் லண்டனில் இருந்து வந்த பிரஃபசர் இருக்கிறார் நன்றாக நடிப்பை கத்துக்கொடுப்பார் என கேலி செய்யும் வகையில் மாதவியிடம் கூறியிருக்கிறார்.
இதை உண்மை என்று நினைத்து மாதவியும், சத்யராஜிடம் ஏதோ கூறி வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டார். அன்றில் இருந்து சத்யராஜ், ரஜினி மீதான ஈகோவை வளர்க்க காரணமாக இருந்தது.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு பின் இருவரின் நடிப்பில் 1986ல் வெளியான மிஸ்டர் பாரத் படத்தில் சத்யராஜ், ரஜினி நடித்தார்கள். அப்படத்தில் ரஜினிகாந்தின் காட்சிகளை விட்டுவிட்டு சத்யராஜின் பாதி காட்சிகளை வெட்டி வீசியுள்ளனர் படக்குழுவினர்.
இதை ரஜினி தான் செய்துள்ளார் என்று நினைத்து அவர் பக்கமே தலை வைக்கவில்லை. அன்றிலிருந்து 37 வருடங்களாக ரஜினிகாந்தை பற்றி படுமோசமான விமர்சித்து மறைமுகமாக திட்டியும் வந்துள்ளார் சத்யராஜ்.