பார்ட்டி ஒரு கேடா! மகள்களை கண்டித்த சூப்பர் ஸ்டார்? பிழைக்க தெரியாத பசங்க..
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தை தற்போது வரை கட்டிக்காத்து வருபவர் ரஜினிகாந்த். உலக மக்களின் ஆதரவை பெற்று தன்னுடைய ஸ்டைலிஷ் நடிப்பால் இன்றுவரை நல்ல பேரை எடுத்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் 169 வது படத்தில் கமிட்டாகி இருக்கும் சூப்பர் ஸ்டார் வருகிற ஏப்ரல் மாதம் அப்படத்தின் பூஜையை ஆரம்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே ரஜினிகாந்திற்கு கஷ்டத்தை கொடுத்து வருவது மகள்களின் விவாகர்த்து செய்திகள் தான். இரண்டாம் மகள் செளந்தர்யா விவாகரத்து பெற்று பிரிந்து, பின் வேறொருவரை திருமணம் செய்தார். அவரை தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் விவகாரம் தான். ரஜினியின் குடும்பத்தை மைய்ப்படுத்தி பலர் கண்டபடியான செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ரஜினி தன் மகள்களை பற்றி பேசி செய்தி வைரலாகி வருகிறது. இருமகள்களையும் திருமணம் செய்து வைத்துவிட்டேன். தங்கள் குடும்பத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாலே போது என்ற அறிவுரையோடு இருந்த ரஜினி இருமகள்கள் தயாரிப்பு இயக்கம் என இறங்கினார்கள்.
அதற்காக ஆக்கர் ஸ்டுடியோவை கட்டித்தந்துள்ளார் ரஜினிகாந்த். சில மாதங்கள் பணிகளை தொடங்கிய மகள்கள் போகப்போக பார்ட்டி வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தெரிந்து அப்படியே அந்த ஸ்டுடியோவை மூட வைத்துள்ளார்.
இதனால் மகள்களிடம் கடுமையாக கண்டித்து, வாழ்க்கையை ஒழுங்காக வாழுங்கள் இருக்கிற பணத்தை காப்பாற்றிக்கொண்டாலே போதும் என்று கூறியுள்ளார். இதை கண்டுகொள்ளாமல் மீண்டும் ஐஸ்வர்யா தயாரிப்பில் குதித்துள்ளது தனி அலுவலகத்தையும் திறந்து வேலை செய்து வருகிறார்.