நடிப்பின் ராட்சசியையே கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்.. கேள்விக்குறியான ஜோதிகாவின் கேரியர்

Rajinikanth Suriya Jyothika
By Edward Aug 26, 2022 08:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. வாளி படத்தில் சிறு ரோலில் அறிமுகமாகி அடுத்தடுத்த தென்னிந்திய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

ஒரு கட்டத்தில் நடிப்பின் ராட்சசி என்ற பெயரை தன் திறமையால் புகழப்பட்டவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி குடும்பத்தை கவனித்து வந்தார். இதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் 36 வயதினிலே படத்தின் மூல ரீஎண்ட்டி கொடுத்து நடித்து வருகிறார்.

ஜோதிகாவின் உச்சத்தை தொட்ட படமாக அமைந்தது தான் சந்திரமுகி. இன்று வரை அவரின் கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் சரிபட்டு வராது தான் என்று சொல்வார்கள். அப்படியொரு நடிப்பை ரஜினிகாந்த் மேடையிலேயே புகழ்ந்திருந்தார்.

அதே போல் மொழி, உடன் பிறப்பே, பொன்மகள் வந்தாள், ராட்சசி, நாச்சியார், காற்றின் மொழி போன்ற படங்கள் திருமணத்திற்கு பின் வெளியாகி அவரின் நடிப்பு ராட்சசி என்று நிரூபித்திருக்கிறார்.