மூத்த நடிகை காலில் விழுந்த ரஜினிகாந்த்!! நெகிழ்ந்து போன அரங்கம்..
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கமல் ஹாசன் தயாரிப்பில் 173வது படத்தின் கதைகளை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் கல்வியாளர், பத்மஸ்ரீ விருது பெற்ற ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகை வைஜெயந்தி மாலா பாலிக்கு, கலாசாரா மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.
வைஜெயந்தி மாலா
அப்போது தன்னுடைய மூத்த நடிகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில், ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த், பாடகி நித்யஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், 50 ஆண்டுகால திரையுலக சாதனையை பாராட்டும் வகையில், கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

